தந்தையானார் மிர்ச்சி சிவா ! சுவையான செய்தி இதோ
By Sakthi Priyan | Galatta | July 25, 2019 18:07 PM IST
தமிழ் சினிமா நடிகர்களில் பெரிதும் பிரபலமானவர் மிர்ச்சி சிவா. ஷாம் நடித்த 12B படத்தில் துணை நடிகராக அறிமுகமான சிவா தற்போது அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று அபிமான நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.
துவக்கத்தில் பிரபல fm சேனல் ஒன்றில் ஆர் ஜேவாக பணியாற்றி வந்த இவர், பின்னர் சினிமாவில் ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார் படங்களில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இவர், பின்னர் 2010-ம் ஆண்டு சி எஸ் அமுதன் இயக்கிய ‘தமிழ் படம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவக அவதரமேடுத்தார்.
நடிகர் சிவா 2012-ம் ஆண்டு பிரியா என்ற பேட்மிண்டன் வீராங்கனையை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அகஸ்தியா என்று பெயர் சூட்டியுள்ளனர். நடிகர் சிவா மற்றும் பிரியாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறது கலாட்டா.