தர்பாரில் இணைந்த மரண மாஸ் கூட்டணி ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | May 19, 2019 12:00 PM IST
பேட்ட படத்தின் Blockbuster வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தர்பார்.இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.லைகா Productions இந்த படத்தை தயாரிக்கிறது.நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மும்பையில் நடைபெற்று வருகிறது.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துவருகிறார்.தற்போது இந்த படத்தில் இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர் இணைந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியன் இந்த படத்தில் ஒரு பாடல் பாட ஒப்பந்தமாகியுள்ளார்.ஏற்கனவே இவர் ரஜினிக்காக பாடிய பல பாடல்கள் சூப்பர்ஹிட் அடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் இவர் பேட்ட படத்தில் பாடிய மரண மாஸ் பாடலும் பட்டிதொட்டி எங்கும் வைரல் ஹிட் அடித்தது.
இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தர்பாரில் அனிருத் இசையில் சூப்பர்ஸ்டாருக்காக SPB பாடவுள்ளார்.இந்த பாடல் ஓப்பனிங் பாடலாக இருக்குமா இருக்குமா அல்லது மெலடி பாடலாக இருக்குமா என்று அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.