EXCLUSIVE : மாமனிதன் படம் குறித்த ருசிகர தகவல் !
By Sakthi Priyan | Galatta | February 16, 2019 15:32 PM IST
YSR ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் படம் மாமனிதன். இப்படத்தில் காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவுனும் சேர்ந்து இசையமைக்கிறார்கள். இசையமைக்கும் பணி இன்னும் துவங்கவில்லையாம்.
மைனா, பைரவா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறாராம். மேலும் ஜோக்கர் பட புகழ் குரு சோமசுந்தரம் விஜய் சேதுபதியின் நண்பராக நடிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்று கூறலாம்.