விஜய்சேதுபதியின் சிந்துபாத் புதிய ரிலீஸ் தேதி இதோ !
By Aravind Selvam | Galatta | June 25, 2019 17:58 PM IST
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ள படம் சிந்துபாத்.இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கியுள்ளார்.அஞ்சலி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சூர்யா விஜய்சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.K Productions தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.இந்த படம் கடந்த ஜூன் 21 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.தற்போது பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு இந்த படம் வரும் ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினரானால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து விஜய்சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.