தனுஷ் நடிப்பில் மாரி 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | November 02, 2018 11:27 AM IST
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஷன் காமெடி படம் தான் மாரி. தற்போது இதன் இரண்டாம் பாகமான மாரி2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
குறும்புத்தனமான டான் பாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர்.
The naughtiest don is back. #Maari2FirstLook#Maari2 #tharalocal #senjuruven pic.twitter.com/i4NdjhiX54
— Dhanush (@dhanushkraja) November 2, 2018
யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் தனுஷ் வெடியுடன் இருக்கும் போஸ்டர் தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
வடசென்னை படத்தின் வெற்றிக்கு பிறகு மாரி 2 மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.