மெர்சல் மற்றும் சர்க்கார் பற்றி எடுத்துரைத்த பேட்ட பாடலாசிரியர் !
By Sakthi Priyan | Galatta | December 08, 2018 08:40 AM IST
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாய் ஓடிய படம் மெர்சல். இதில் இடம் பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் காலத்தால் அழியாத தமிழ் கல்வெட்டு போல் விளங்கும் என்று கூறலாம்.
இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் தான் இப்போதைய டாக்-ஆஃப்-தி-டவுன். தற்போது இவர் எழுதிய சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தின் பாடல்களும் சக்கை போடு போட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டரில், இதுவரை வந்த தமிழ் திரைப்படங்களில் மெர்சல் படத்தின் பாடல்கள் தான் 10 மில்லியன் பார்வையாளர்களைத்தாண்டி அனைவராலும் ஈர்க்கப்பட்டு சாதனை செய்து வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.
If i am not wrong, #Mersal became d 1st tamil movie where all Lyric videos and Video Songs crossed 10M views Each. Now all lyric videos of #Sarkar hav crossed 10M views thanks to the magical ARR Sir-Vijay Sir combo😍
— Vivek Lyricist (@Lyricist_Vivek) December 8, 2018
Elated as #MaranaMass is heading towards it as well #Petta 🔥
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் இவர் எழுதிய சர்க்கார் பட பாடல்களும் 10 மில்லயனுக்கு மேல் சென்றுவிட்டது குறித்தும் கூறியுள்ளார். பாடலாசிரியர்களாலும் படத்திற்கு வலு சேரும் என்று எடுத்துக்காட்டாய் திகழ்ந்த விவேக் அவர்களை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறது கலாட்டா.