குத்திட்டேன் ... நான் கொன்னுட்டேன் ! சப்பாத்தியில் கோபத்தை காட்டிய லாஸ்லியா
By Sakthi Priyan | Galatta | July 18, 2019 09:00 AM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மாடல் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு சமீபத்தில் வந்து சேர்ந்தார். ஆண்கள் பெண்கள் வேடமிட்டு நடிப்பது போன்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு மற்றும் வனிதா வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில், ஷெரின் தர்ஷனுக்கு சுட்டு தந்த ஹார்ட்டின் சப்பாத்தியை லாஸ்லியா குத்துகிறார். இதை அருகில் இருந்து ஒட்டுக்கேட்ட ஷெரின் தர்ஷனை கண்டிக்கிறார்.
#Day25 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/tp7tmH4ak0
— Vijay Television (@vijaytelevision) July 18, 2019