தல அஜித் குறித்து இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை பதிவு !
By Sakthi Priyan | Galatta | January 11, 2019 10:06 AM IST
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்படம் நேற்று ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இதுகுறித்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' புகழ் நடிகை சந்திரிகா ரவி ட்விட்டரில், விஸ்வாசம் படம் பிளாக்பஸ்டராக உள்ளது என கேட்டறிந்தாராம். மேலும் தனது குடும்பத்துடன் கண்டுகளிக்க போவதாகவும் பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தல அஜித்தை திரையில் காண ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Hearing that #Viswasam is a BLOCKBUSTER!!! Going to take my family to watch this weekend here in Perth! Excited to watch the great #Ajith sir and the beautiful Nayanthara ma’am @directorsiva
— Chandrika Ravi (@chandrikaravi_) January 11, 2019