NGK படத்தின் ருசிகர தகவல் ! சூர்யா படத்திற்கு கூடுதல் வலு !
By Sakthi Priyan | Galatta | December 07, 2018 16:41 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் NGK. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் நடிகர் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி, ஜகபதி பாபு போன்ற நடிகர்கள் உள்ளனர்.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் இசை பணிகள் துவங்கிவிட்டது.
படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகளை துவங்கிய NGK படக்குழுவினர், தற்போது SonyMusicSouth நிறுவனத்துடன் இணைந்திருக்கிறார்கள். இப்படம் நிச்சயம் சூர்யா ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
Happy to associate with @SonyMusicSouth for #NGK. @Suriya_offl @selvaraghavan @thisisysr @Sai_Pallavi92 @Rakulpreet #NGKwithSony #SonyMusicBagsNGK pic.twitter.com/FVbw4yE7d2
— DreamWarriorPictures (@DreamWarriorpic) December 7, 2018