கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி படத்தை தொடர்ந்து, இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `பேரன்பு'. 

கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம், பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் திரை ரசிகர்களுக்கு இயக்குனர் ராம் அளிக்கும் விருந்து என கூறலாம். பி.எல். தேனப்பன் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படைப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Director Rams Peranbu Movie World Wide Release Date Locked In Febraury