விக்ரம் நடிக்கும் 58வது படத்தின் இயக்குனர் இவர்தான் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | May 20, 2019 19:04 PM IST
இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.தற்போது செம பிஸியாக கடாரம் கொண்டான்,மஹாவீர் கர்ணா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவரது துருவ நட்சத்திரம் படமும் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
கடாரம் கொண்டான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இந்நிலையில் இவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்,நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விக்ரமுடன் அஜய் கைகோர்ப்பதால் ஒரு செம திரில்லர் படத்தை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.