சரி சரி-னு மண்டைய ஆட்டிட்டு ! மோகன் வைத்தியா குமுறல்
By Sakthi Priyan | Galatta | July 16, 2019 11:20 AM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மாடல் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு சமீபத்தில் வந்து சேர்ந்தார். ஆண்கள் பெண்கள் வேடமிட்டு நடிப்பது போன்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு மற்றும் வனிதா வீட்டை விட்டு வெளியேறினார்கள்.
தற்போது வெளியான ப்ரோமோவில், மோகன் வைத்யாவிடம் சாக்ஷி சண்டையிடுவது போல் தெரிகிறது. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசவேண்டும் என்று கூறுகிறார்.
#Day23 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/vjzybCXjak
— Vijay Television (@vijaytelevision) July 16, 2019