வைரலாகும் பிக்பாஸ் சீசன் 3 புதிய ப்ரோமோ வீடியோ
By Sakthi Priyan | Galatta | May 15, 2019 14:00 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதன் மூன்றாம் சீசன் விரைவில் துவங்கவுள்ளது.
முதல் சீசனைப் போலவே இந்த சீசனும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை நாளடைவில் அதிகரித்து வருகிறது.
தற்போது பிக்பாஸ் மூன்றாம் சீசனின் ப்ரோமோ வீடியோ வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது. உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்க உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
😎 பிக்பாஸ் 3 விரைவில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBoss3 @ikamalhaasan #VijayTelevision pic.twitter.com/g2WjTYC7E9
— Vijay Television (@vijaytelevision) May 15, 2019