ஆடை படத்தின் புதிய பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | July 15, 2019 16:32 PM IST
மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆடை.இந்த படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படம் இதுதான்.இந்த படத்தை V ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் Firstlook சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஜூலை 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது பழம்பெரும் பாடகி பி.சுசீலா பாடியுள்ள பக்தி பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்