தல அஜித்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் ! முழுவிவரம் இதோ
By Sakthi Priyan | Galatta | March 13, 2019 13:10 PM IST
தமிழ் சினிமாவின் தரமான ஹீரோயின்கள் வரிசையில் கீர்த்தி சுரேஷிற்கு என தனி இடமுண்டு. ரஜினிமுருகன், பைரவா, ரெமோ, சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.
தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் கால் பதிக்கவிருக்கிறார். சயத் அப்துல் ரஹிம் எனும் 1950-ல் இருந்த கால்பந்து பயிற்சியாளரின் வாழக்கையை படமாக்க உள்ளதாகவும், அதில் நடிகர் அஜய் தேவ்கன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகியது.
பதாய் ஹோ எனும் படத்தை இயக்கிய அமித் ஷர்மா இந்த படத்தை இயக்கவுள்ளார். போனி கபூரின் Bayview Projects LLP நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகியது. தற்போது போனி கபூர் தல அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.