கபடி கற்றுக்கொள்ள விரும்பும் விக்ராந்த் ! வெண்ணிலா கபடி குழு 2 வீடியோ
By Sakthi Priyan | Galatta | July 11, 2019 10:11 AM IST
கடந்த 2009-ஆம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் வெண்ணிலா கபடி குழு. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், பரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது.
மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில், இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் வெண்ணிலா கபடி குழு 2 திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர்.
இரண்டாம் பாகத்தில் சந்தோஷ், பசுபதி, பரோட்டா சூரி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. தற்போது படத்திலிருந்து Sneak Peek காட்சி வெளியாகியுள்ளது. முதல் பாகம் போல் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.