என்னையும் என் தந்தையையும் மிரட்டினார்கள்- சித்தார்த் !
By Sakthi Priyan | Galatta | October 17, 2018 15:59 PM IST
கடந்த இரு வாரமாக சூடு பிடிக்கும் மீ டூ மொமெண்ட் என்ற ஹாஷ்டாகில் பாலியல் துன்புறுத்தலை கண்டிக்கும் வகையில் அதற்க்கு ஆதரவாக இருந்து வரும் சினிமா பிரபலங்களில் சித்தார்த்தும் ஒருவர். லீனா மணிமேகலை என்ற இளம் இயக்குனரை பிரபல இயக்குனரான சுசிகணேசன் பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் சமூக வளைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தார்.
சுசிகணேசனின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்ட நிலையில் இந்நிகழ்வை கண்டித்து அவர் சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாக லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
மீ டூ வை பயன்படுத்தி தவறு செய்யாத ஆண்களையும் தாக்குபவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் சுசிகணேசன் கூறியிருக்கிறார்.
லீனாவுக்கு ஆதரவாக சித்தார்த் ட்வீட் செய்ததால் நடிகர் சித்தார்த் மற்றும் அவரது தந்தைக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்திருக்கிறார் சுசிகணேசன். இதற்க்கு சரியான பதிலடி தரும் வகையில் லீனாவுடன் சேர்ந்து இந்த மீ டூ நிகழ்வில் போராடப்போவதாக சித்தார்த் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
#SusiGanesan spoke to my aged father on the phone and threatened us with dire consequences if I continue to stand by Leena. So I just want everyone to know that now more than ever... I Stand With #LeenaManimekalai. Stay strong and fight the good fight sister! #MeToo #TimesUp https://t.co/aMNfxXm46M
— Siddharth (@Actor_Siddharth) October 17, 2018