இரட்டை வேடங்களில் மிரட்டும் நயன்தாரா ! ஐரா படத்தின் ட்ரைலர்
By Aravind Selvam | Galatta | March 20, 2019 17:35 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அறம்,கோலமாவு கோகிலா என ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஐரா திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளிவர உள்ளது.இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.இந்த படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார். கலையரசன்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பாக செம த்ரில்லாக இருக்கும் இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்