ரசிகர்களோடு ரஜினிஃபைட் ஆகிய கார்த்திக் சுப்பராஜ் !
By Sakthi Priyan | Galatta | January 19, 2019 13:35 PM IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை தந்த கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பேட்ட படக்குழுவினரை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் வெற்றி தருணத்தை பற்றி ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். பேட்ட படக்குழுவினர் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று ரசிகர்களோடு பார்த்தது குறித்து கூறியுள்ளார். மேலும் இப்படத்திற்கு மரணமாஸ் ரெஸ்பான்ஸ் அளித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
We, the #Petta team visited many theatres across TN in past few days just to relish & celebrate our MOMENT!!
— karthik subbaraj (@karthiksubbaraj) January 19, 2019
Big thanks to the audience 🙏 We are Overwhelmed!!
From Seeing the #MaranaMass response & abundant LOVE shown to the film from everyone,
I Just have one thing to say... pic.twitter.com/tc7dt2xmr9