விமல் - வரலக்ஷ்மி நடிப்பில் கன்னிராசி படத்தின் ட்ரைலர் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | July 16, 2019 18:10 PM IST
களவாணி 2 படத்தை தொடர்ந்து விமல் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் கன்னிராசி. ஷமீம் இப்ராஹிம் இந்த படத்தை தயாரிக்கிறார். முத்துகுமரன் இயக்குகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இந்த படத்தில் வரலக்ஷ்மி விமலுடன் சேர்ந்து நடிக்கிறார்.
படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண் டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இதுதான் இந்த ட்ரைலரில் வருகிறது.
இந்நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அசத்தி வருகிறது.