காயப்பட்ட காப்பான் பட நடிகர் ! முழுவிவரம் உள்ளே
By Sakthi Priyan | Galatta | May 21, 2019 17:27 PM IST
லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சாயிஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, பூர்ணா, போமன் இரானி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர்.
சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட டீஸர் அனைவரையும் ஈர்த்து வருகிறது. தற்போது படத்தின் வில்லன் சிராக் ஜானி G எனும் குஜராத்தி படத்தில் நாயகனாக நடிக்கும்போது அடிபட்டதாக தகவல் வெளியானது. இன்னும் சிராக் நடிக்கவிருக்கும் காட்சிகள் மீதம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 30-ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளதால், சூர்யா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.