ஹாட்ரிக் அடிக்க தயாராகும் ஹிப்ஹாப் தமிழா !
By Aravind Selvam | Galatta | June 25, 2019 14:04 PM IST
இளைஞர்களின் இன்டர்நெட் நாயகனாக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து நிற்பவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.இசை மட்டுமின்றி நடிப்பு,இயக்கம் என அனைத்து துறைகளிலும் சிக்ஸர் அடித்துவிட்டார்.
இவரது நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு,நட்பே துணை இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இரண்டு படங்களையுமே இயக்குனர் சுந்தர் சி தயாரித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
Black Comedy Genre-ல் உருவாக இருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராணா இயக்குகிறார்.தமிழ் படம் 2வில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா மேனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இந்த படத்தையும் இயக்குனர் சுந்தர் சி தயாரிக்க உள்ளார்.இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் படத்தின் நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி.