தோஸ்த்தே டக்கரு Dear Comrade படத்தின் கலக்கலான வீடியோ பாடல் !
By Aravind Selvam | Galatta | July 24, 2019 17:20 PM IST
தமிழ்,தெலுங்கில் தனது முத்திரையை பதித்த பிறகு அடுத்ததாக புதிய மொழிகளில் களமிறங்க தயாராகிறார் தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.இவர் நடித்து வரும் Dear Comrade படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது.இந்த படத்தில் ஹீரோயினாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படம் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ஜூலை மாதம் 26ஆம் தேதி நான்கு மொழிகளிலும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.தற்போது இந்த படத்தின் தோஸ்த்தே டக்கரு என்ற பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்