நனவானது இயக்குனர் விக்னேஷ் சிவனின் நான்காம் கனவு !
By Sakthi Priyan | Galatta | March 21, 2019 12:24 PM IST
போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இயக்குனர் அல்லாது பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுள்ளவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.
தற்போது லைக்கா நிறுவனத்துடன் இணைந்து படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் விக்னேஷ் சிவன் இணைவது இதுவே முதல் முறை.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். தனது நண்பர்களான சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Dream no:4 😇activated🥳
— Vignesh Shivan (@VigneshShivN) March 21, 2019
Thanks for the big opportunity dearest @Siva_Kartikeyan 🤗😇 gonna be a fun ride🤩🥳😇
As always its a great blessing to have my king👑 @anirudhofficial givin life to all of my dreams 😇🤗
Elated to be associated wit @LycaProductions after NRD#SK17 pic.twitter.com/MI57Ht4TzN