தனுஷ் பிறந்தநாள் அன்று செம அப்டேட்டுடன் வரும் படக்குழுவினர் !
By Aravind Selvam | Galatta | July 21, 2019 14:29 PM IST
தமிழ் சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்டாக நடிக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ்.கைநிறைய படங்கள் வைத்துள்ள தனுஷ் தற்போது வெற்றிமாறனின் அசுரன்,மற்றும் துரை செந்தில்குமாரின் பெயரிடப்படாத படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
கொடி படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் ஒன்று சேர்வதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.ஹீரோயினாக சினேகா,மெஹரீன் பிர்சாடா இருவரும் நடிக்கின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.தற்போது இந்த படத்தின் Firstlook தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்று நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.