மணிரத்னம் படத்தில் மடோனா ?? விவரம் உள்ளே
By Sakthi Priyan | Galatta | June 25, 2019 17:00 PM IST
![மணிரத்னம் படத்தில் மடோனா ?? விவரம் உள்ளே - Tamil Movie Cinema News மணிரத்னம் படத்தில் மடோனா ?? விவரம் உள்ளே - Tamil Movie Cinema News](https://1480864561.rsc.cdn77.org/assets/news_images/63143855-4550.jpg)
தமிழ் சினிமாவின் legendry இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச் சிவந்த வானம். உச்ச நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இயக்கம் அல்லாது தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அடுத்த படம் வானம் கொட்டட்டும் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை தனா இயக்கிவருகிறார்.
விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற செய்தியும் சிக்கியது. இன்ஸ்டாகிராமில் மடோனா பகிர்ந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் மடோனா நடிக்கிறார் என்ற வதந்தியை கிளப்பத்துவங்கினர்.