எனக்கு BP வராது ! முட்டிக்கொண்ட பிக்பாஸ் வீட்டு சண்டை
By Sakthi Priyan | Galatta | June 26, 2019 09:43 AM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. நேற்று புதிதாக மாடல் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
தற்போது வெளியான ப்ரோமோவில் மீரா மிதுனுடன் அபிராமி சண்டை போடுவது போல் தெரிகிறது. அதன் பின் வனிதாவை கூட்டி வந்து பேசுகின்றனர். கத்தி பேசினால் உங்களுக்கு தான் BP வரும் என்று மீரா கூறினார். அதற்கு BP வராது என்று எடுத்துரைக்கிறார் வனிதா.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/jOIByBkk8c
— Vijay Television (@vijaytelevision) June 26, 2019