அரவிந்த் சாமி படத்தின் டைட்டில் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | June 18, 2019 12:04 PM IST
தனி ஒருவன் படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கிய அரவிந்த் சாமி ஒவ்வொரு படத்திலும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.தற்போது இவர் கஜினிகாந்த் ,இருட்டு அறையில் முரட்டு குத்து,ஹரஹர மஹாதேவகி உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
EtcEtra என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துவருகிறார்.தற்போது படத்தின் நாயகன் அரவிந்த் சாமியின் பிறந்தநாளான இன்று இந்த ;படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
இந்த படத்திற்கு புலனாய்வு என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் Firstlook போஸ்டரோடு இந்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.இந்த படம் இந்த வருட இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.