“90ஸ் கிட்ஸ்களை கடுபேத்தி வெறுப்பேற்றும் விதமாக, 66 வயது முதியவர் ஒருவர், ஏற்கனவே 16 மனைவிகளை திருமணம் செய்துகொண்டு, 151 பிள்ளைகள் இருக்கும் நிலையில், 17 வது திருமணத்திற்குத் தயாராகி வருவது இன்னும் கல்யாணம் ஆகாத 90ஸ் கிட்ஸ் முரட்டு சிங்கிள்ஸின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாகி உள்ளார்.

தமிழ்நாட்டில் 90ஸ் கிட்ஸ்கள் சிலருக்கு இப்போது வரை திருமணம் நடக்காமல் உள்ளது. இதனால், அவர்களும் வேறு வழியின்றி “நாங்கள் முரட்டு சிங்கிள்” என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். 

இப்படியான நிலையில் தான், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஆண்கள் அல்லது பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்துகொண்ட தகவல்கள் கிடைக்கும் போது, 90ஸ் கிட்ஸ்கள் எல்லாம் கோபத்தின் உச்சத்திற்கே சென்று விடுகிறார்கள். அதில், சில முரட்டு சிங்கிள்கள் சாபம் விடுவதும், சிலர் வயிற்றெச்சல் பட்டாலும், “நல்லா இருந்து போடா” என்று, பொறாமையில் வாழ்த்துவதும் கடந்த காலங்களில் இணையத்தில் நாம் தொடர்ந்து பார்த்த செய்திகளாக இருக்கின்றன. அப்படியான ஒரு செய்தி தான், மீண்டும் வந்திருக்கிறது.

ஜிம்பாப்வே நாட்டில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஜிம்பாப்வே நாட்டில்,  66 வயது முதியர் ஒருவர், ஏற்கனவே 16 மனைவிகளைத் திருமணம் செய்துகொண்டு, 151 பிள்ளைகள் இருக்கும் நிலையில், 17 வது திருமணத்திற்குத் தயாராகி வருவது இன்னும் கல்யாணம் ஆகாத 90ஸ் கிட்ஸ் முரட்டு சிங்கிள்ஸின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாக்கி இருக்கிறது. 

ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த மிஷெக் நியாண்டோரோ என்பவர் வசித்து வருகிறார். இவர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். 

மிஷெக் நியாண்டோரோ, இது வரை 16 பெண்களைத் திருமணம் செய்திருக்கிறார். இந்த 16 மனைவிக்கும் சேர்த்து மொத்தம் 151 பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால், இந்த ஆச்சரியத்தை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஒரு படி மேலே சென்று, தன்னுடைய அடுத்த திருமணம் அதாவது அவர் தன்னுடைய 17 வது திருமணத்திற்குத் தயாராகி வருகிறார்.

தற்போது, அவர் 17 வதாக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்யும் முடிவில் இருக்கிறார். அது தொடர்பான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

66 வயதான மிஷெக் நியாண்டோரோ, ஒவ்வொரு நாள் இரவும் 4 மனைவிகளுடன் தங்கி வருவாராம். 

“இவர், எப்போதும் தன்னுடைய அனைத்து மனைவிகளையும் சந்தோசமாக வைத்துக் கொள்வதைத் தான், தன்னுடைய முழு நேர வேலையாக அவர் பார்த்து வருகிறார்” என்றும், அவரே கூறியுள்ளார்.

தற்போது, தன்னுடைய 66 வயதான நிலையிலும் மீண்டும் ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள அவர் முடிவு செய்துள்ள காரணம் தான், அனைவரையும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களை கடுப்பேற்றி வெறுப்பேற்றும் விதமாக உள்ளது. 

அதற்கு அவர் சொல்லும் காரணம் என்னவென்றால், “எனது மனைவிகளுக்கு எல்லாம் தற்போது வயதாகி விட்டது” என்று, அவர் தன்னுடைய 66 வயதில் கூறியிருக்கிறார்.

“இதன் காரணமாகவே, இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும்” அவர் கூறியுள்ளார்.  

மிக முக்கியமாக, “100 மனைவிகளுடன் 1000 குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதே எனது ஆசை” என்றும், மிஷெக் நியாண்டோரோ தெரிவித்துள்ளார்.

கடந்த 1983 ஆம் ஆண்டில் இவரது திருமண வாழ்க்கை தொடங்கி இருக்கிறது. இவருக்கு, 16 மனைவிகள் மற்றும் 151 பிள்ளைகள் இருக்கும் போதிலும், இது வரை தனக்கு எந்த ஒரு பணப் பிரச்சனையும், நிதிச்சுமையும் ஏற்பட்டதில்லை” என்றும், அவர் தெரிவித்து உள்ளார். இந்த செய்தியைப் படிக்கும் 90ஸ் கிட்ஸ்கள் எல்லாம் தற்போது செம கடுப்பிலும், பொறாமையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.