பெரு நாட்டில் கள்ளத் தொடர்பில் இருந்த மனைவியை, கூகுள் மேப் கணவருக்கு காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரு நாட்டின் லிமா நகரத்தைச் சேர்ந்த ஒருவர், தன் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, அலுவலகத்தில் இருந்து எதார்த்தமாக கூகுள் மேப்பின் ஸ்ட்ரீட் வியூ தொழில் நுட்பத்தின் மூலம், தனது வீட்டைப் பார்த்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக லிமா நகரத்தின் சாலை மற்றும் நடைபாதைகளையும் அவர் ஸ்ட்ரீட் வியூவில் பார்த்துள்ளார்.

அப்போது, அவருடைய மனைவி அங்குள்ள நடைபாதை பெஞ்சில் அமர்ந்திருக்க, அவருடைய மனையின் மேல் மற்றொரு ஆண் ஒருவர் தலை வைத்துப் படுத்துக்கொண்டு இருந்துள்ளார். அவர்கள் இருவரும் இப்படியாக வெகு நேரம் ரொமன்ஸ் செய்து வந்துள்ளனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த கணவர், தன் மனைவியின் முகத்தைக் காண முற்பட்டுள்ளார். ஆனால், அவரின் முகத்தைச் சரியாக அதில் பார்க்க முடியவில்லை. ஆனால், அணிந்து இருந்த உடை மற்றும், அந்த பெண்ணின் இயல்பான செயல்பாடுகள் அனைத்தும், அவருடைய மனைவியைப் போல் இருந்துள்ளது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த கணவன், வீடு திரும்பி உள்ளார். வீட்டிற்கு வந்ததும், இது தொடர்பாக அவர் தனது மனைவியிடம் விசாரித்து உள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்,“ கணவரிடம் வசமாக மாட்டிக்கொண்டோம்” என்பதை உணர்ந்து, “ஆம், நான் தான் என் காதலன் உடன் அப்படி அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தேன்” என்று உண்மையை ஒப்புக் கொண்டார்.

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த கணவன், மனைவியிடம் சண்டைக்குச் சென்றுள்ளார். அப்போது, சற்றும் யோசிக்காத அவரது மனைவி, “நாம் பிரிந்து விடலாம். இனி உங்களுக்கும் எனக்கும் செட்டாகது. பிரிந்து விடுவதே நல்லது. அது தான், இருவருக்கும் நல்லது” என்று கூறி உள்ளார்.

இதனைக் கெட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த கணவன் சிறிது நேரம் அமைதியாக இருந்து யோசித்துவிட்டு, அதன் பிறகு அவரும் சரி ஒன்று ஒப்புக் கொண்டார்.

அதன்படி, கணவன் - மனைவி இருவரும் பிரிவது என்று ஒருசேர முடிவெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் பரஸ்பர விவகாரத்துக்காக நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பாக வழக்க விரைவில் நீதிமன்றத்தில் வர உள்ளது. இதனால், அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செய்தி, இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.