“ஐ லவ் யூ டார்லிங்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..” என்று தன் உடம்பில் தீயை மூட்டி லவ் ப்ரபோசல் செய்த சண்டைப் பயிற்சி கலைஞரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவில் தான் நாயகன், நாயகியிடம் காதலை சொல்லும் விதத்தை மிகவும் வித்தியாசமாக காட்சிப் படுத்தி, ரசிர்களை கவர்வார்கள். அந்த சினிமா காட்சிகளை இளம் பட்டாம் பூச்சிகள் தன் சொந்த வாழ்க்கையில் முயன்று பார்க்கும் விசயங்களும் அவ்வப்போது நடப்பது உண்டு. 

ஆனால், சினிமாவையே மிஞ்சம் அளவுக்கு இங்கிலாந்தில் ஒருவர், தன் உடம்பில் தீயை மூட்டி லவ் ப்ரபோசல் செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.  

இங்கிலாந்து நாட்டில் 52 வயதான ரிக்கி ஆஷ் என்பவர், அந்நாட்டின் சினிமா துரையில் ஸ்டண்ட் மேன் கலைஞனாக பணியாற்றி வருகிறார். பல நடிகர்களுக்கு சினிமாவில் டூப் போட்டு நடிக்கும் காட்சிகளிலும் அவர் நடித்து வந்திருக்கிறார். 

அத்துடன், ரிக்கி ஆஷ் கடந்த 27 ஆண்டுகளாக ஏராமளான விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார். 

அதே போல், இங்கிலாந்தைச் சேர்ந்த 48 வயாபன கத்ரீனா டோப்சன் என்ற பெண், அங்குள்ள வில்லியம் ஹார்வி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பிரிவில் செவிலியராகப் பணி புரிந்து வருகிறார். 

இப்படிப்பட்ட சூழலில், கடந்த மார்ச் மாதம் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு, 52 வயதான ரிக்கி ஆஷ்சும் - 48 வயாபன கத்ரீனா டோப்சன் என்ற பெண்ணும் ஆன்லைன் மூலம் சந்தித்து உள்ளனர்.

இதனால், ஒருவரை ஒருவருக்கு மிகவும் பிடித்து விட்டதாகத் தெரிகிறது. இதனால், ஒருவரை ஒருவர் பரஸ்பரமாக நேசித்து வந்தனர்.

இப்படிப்பட்ட சூழல் நிலையில், மற்ற உலக நாடுகளைப் போல், இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக, 48 வயதான கத்ரீனா டோப்சன், தான் பணி புரியும் மருத்துவமனையில் செவிலியர் பணியில் பிஸியானர். 

மேலும், கொரோனா வைரஸ் காரணமாக, அந்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் தவித்து வந்தனர். இதனால், தங்களது நட்பை அவர்கள் வழக்கம் போல், செல்போனிலும் ஆன்லைன் மூலமாகவும் மட்டுமே வளர்த்துக்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறையத் தொடங்கிய நிலையில், அந்நாட்டில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இதன் காரணமாக, ரிக்கி ஆஷ்சும் - கத்ரீனா டோப்சனும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அப்படி, கத்ரீனா டோப்சனை நேரில் சந்திக்கும் போது, “நாம் எப்படியும் காதலை அவரிடம் சொல்லி விட வேண்டும்” என்று, ரிக்கி ஆஷ் தீர்மானித்தார். 

ஏற்கனவே, அவர்கள் சந்திப்பது என்று முடிவு எடுத்தபடி, இருவரும் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தனர். அப்போது, 48 வயதான கத்ரீனா டோப்சனைப் பார்த்த 52 வயாபன ரிக்கி ஆஷ், தன் உடலின் முதுகு பகுதியில் தீயைப் பற்ற வைத்துள்ளார். இதில், தீ பற்றி எரிந்து கொண்டிருக்க, தன் கைகளில் வைத்திருந்த மோதிரங்களுடன், 48 வயதான கத்ரீனா டோப்சனைப் பார்த்து மண்டியிட்டபடி, “ஐ லவ் யூ டார்லிங்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..” என்று, லவ் ப்ரபோசலை செய்து அசத்தினார்.

இப்படியான ஒரு லவ் ப்ரபோசலை சற்றும் எதிர்பார்க்காத 48 வயதான கத்ரீனா டோப்சன், வியந்து நெக்குருகிப் போனார். இதனால், ஆனந்த அதிர்ச்சியடைந்த 48 வயதான கத்ரீனா டோப்சன், 52 வயதான ரிக்கி ஆஷின் காதலை ஏற்றுக்கொண்டு ஆனந்த வெள்ளத்தில் சிரித்தார். அதன்படி, கத்ரீனா டோப்சன் கைகளில், ரிக்கி ஆஷ் தான் பரிசாகக் கொண்டு வந்த மோதிரத்தை அணிவித்து, அதில் முத்தமும் கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தினார்.

இப்படியான லவ் ப்ரபோசலால் திக்குமுக்காடி போன 48 வயதான கத்ரீனா டோப்சன், பதிலுக்கு அவரும் முத்தம் கொடுத்தார். இப்படியாக நெருப்பில் பூத்து மலர்ந்தது அவர்களது இந்த காதல். இதன் காரணமாக, ரிக்கி ஆஷ்சும் - கத்ரீனா டோப்சன் காதல் ப்ரபோசல் இணையத்தில் வைரலாகி வருகிறது.