உடலுறவில் ஈடுபடும் போது மாரடைப்பு ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில், அது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் உடலுறவு கொள்வது மாரடைப்பு ஏற்படுவதை முற்றிலும் தடுக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

“குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவோர், அதிகமாக உடலுறவு கொள்வதால் தான் மாரடைப்பு ஏற்படுகின்றது” என்று, ஒரு சிலர் இத்தனை காலமாக நம்பி வந்தனர். 

அந்த வகையில், இந்த செய்தி உண்மையா என்பது குறித்து, “ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் ப்ரீவென்டிவ் கார்டியாலஜி” புதிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆராய்ச்சியில் பல்வேறு உண்மைகள் தெரிய வந்துள்ளன.

குறிப்பாக, இந்த ஆராய்ச்சியின் முடிவானது, “அதிகமாக உடலுறவு கொள்வதால் தான் மாரடைப்பு ஏற்படுகின்றது என்று இவ்வளவு காலமாக நம்பப்பட்டு வந்ததை முற்றிலும் மறுத்து உள்ளது” தெரிய வந்துள்ளது. 

ஆய்வில், “வழக்கமான உடலுறவு மேற்கொள்ளும் தம்பதிகள், உடலுறவில் ஈடுபடுவதை குறைத்துக் கொண்டவர்களை விட, 35 சதவீதம் இதய நோயால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பான அபாயத்தைத் தவித்து வருகின்றனர்” என்பது தெரிய வந்துள்ளது. 

அத்துடன், “கடந்த 22 ஆண்டுகளாக 495 ஜோடிகளிடம் இந்த ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டு” உள்ளது. 

அதன்படி, “உடலுறவு மேற்கொள்வது ஒரு நல்ல வாழ்வின் அடையாளம் என்றும், மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் உடலுறவை மீண்டும் தொடங்குவது என்பது, ஆரோக்கியமானதாகவும், ஆற்றல் மிக்க ஒன்றாகவும் கூட இருக்க முடியும்” என்பதும் தெரிய வந்திருக்கிறது. 

“இப்படியாக அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவது என்பது, தம்பதிகளுக்கு பொதுவான வாழ்க்கைக்கு உதவியாக வழி வகுக்கும்” என்று இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யாரிவ் கெர்பர் மேற்கோள் காட்டி உள்ளார். 

அதேபோல, “திடீர் உடல் உழைப்பு, உடலுறவு போன்றவற்றால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற பயம் இன்னும் பெரும்பாலோனோர் மனதில் உள்ளது என்றும், ஆனால் மாரடைப்பு ஏற்பட்டுக் குணமானவர்கள் வழக்கமான உடலுறவில் ஈடுபட்டதால் தான் மீண்டும் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்க முடிந்தது” என்றும் ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன. 

“இந்த 22 வருட ஆய்வில், 495 நோயாளிகள் 65 வயதிற்கும் குறைவானவர்கள் மற்றும் முதல் மாரடைப்பு ஏற்பட்டவர்கள் என்று, சராசரியாக 53 

வயதுக்கு உட்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் ஆண்கள் ஆவர். இதில், மொத்த பாதிக்கப்பட்டோரில் 211 நோயாளிகள் 43 சதவீத பேர் காலமானதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வில், “உயிரிழந்த பெரும்பாலானோர் இதய நோய்களைத் தவிர வேறு சில நோய்களுக்கும் ஆளாகியிருப்பதும்” தெரிய வந்துள்ளது.

மேலும், “மாடிப்படியில் எளிதாக ஏறக்கூடியவர்கள், ஜாக்கிங், மற்றும் சரியாக ஒரு மைல் நடக்கக் கூடியவர்கள் என மேம்பட்ட உடல் தகுதி, வலுவான உறவுகள் மற்றும் சிறந்த மன திறன்" போன்றவை மீண்டும் வழக்கமான உடலுறவு மேற்கொள்ள உதவும்” என்றும், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வின் முடிவாக, “ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கைக்குத் தினமும் உடலுறவு கொள்வது மட்டுமே சிறந்த காரணி” என்றும், ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

முக்கியமாக, “மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமான உடலுறவு கொள்வது குறித்து கவலைப்படத் தேவையில்லை என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகிறது” என்றும், இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யாரிவ் கெர்பர் தெரிவித்து உள்ளார்.