அனிருத்தை தொடர்ந்து சந்தோஷ் நாராயணன்.. யுவன் ஷங்கர் ராஜா போடும் மாஸ்டர் பிளான்.. – அட்டகாசமான அப்டேட் உள்ளே..

யுவன் இசையில் பாடும் அனிருத் சந்தோஷ் நாராயணன் அப்டேட் உள்ளே - Yuvan shankar raja  anirudh santhosh narayanan teamup for one big song | Galatta

பாக்ஸ் ஆபிஸை குவிக்கும் திரை நட்சத்திரங்களுக்கு இணையான ரசிகர் பட்டளத்தை கொண்டு பல ஆண்டுகளாக திரையுலகில் வலம் வரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் யுவன் ஷங்கர் ராஜா. தன் வசீகராமான இசையினால் ரசிகர்களை ஆர்பரிக்க வைக்கும் யுவன் 90 களில் பிற்பகுதி தொடங்கி இன்று வரை முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பணியாற்றியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. கடந்த ஆண்டு இவரது இசையில் 11 திரைப்படங்கள் வெளியாகின. அதன்படி நானே வருவேன், லவ் டுடே, விருமன் போன்ற படங்கள் ஆல்பம் ஹிட் என்று கொண்டாடப்பட்டது. தற்போது யுவன் ஷங்கர் ராஜா, யுவன் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’, அமீர் இயக்கத்தில் உருவாகும் ‘இறைவன் மிக பெரியவன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இதில் ரசிகர்களை ஆர்பரிக்க வைத்த அப்டேட் என்றால் அது தளபதி 68 படத்திற்கு இசையமைப்பது தான். ஏ ஜி எஸ் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள ‘தளபதி 68’ படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு கொண்டு சேர்த்தது.

இந்நிலையில் தற்போது யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் அவரது அடுத்த பெரிய படத்திற்கான பாடலுக்கு முன்னணி இசையமைப்பாளருடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் அதற்கு நல்ல பரிந்துரை செய்யுமாறும் சமீபத்தில் அவரது ரசிகர்களிடம் கேட்டார். அதில் பெரும்பாலானோர் அனிருத் என்றே பரிந்துரைத்தனர். அதன்படி ரசிகர்களின் விருப்பப் படி யுவன் ஷங்கர் ராஜா இசையில் அனிருத் பாடவுள்ளார் என்ற தகவலை அசத்தலான வீடியோவுடன் தனது ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்தார். இதையடுத்து அவரது வீடியோ மிகப்பெரிய அளவு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் முன்னதாக யுவன் ஷங்கர் ராஜா பதிவிட்ட பதிவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூட்டணிக்கு வருவதாக வேடிக்கையாக பதிவிட்டு தனது ஆவலை வெளிப்படுத்தினார். பொதுவாகவே சந்தோஷ் நாராயணன் யுவன் ஷங்கர் ராஜாவின் தீவிர ரசிகர்.  இந்நிலையில் சந்தோஷ் நாராயணனின் பதிவை யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்து அதனுடன்.

“சார் நம்ம பாட்டும் இருக்கு.. விரைவில் அதற்காக காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து அனிருத்தை தொடர்ந்து யுவனுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் சந்தோஷ் நாராயணன். இப்பதிவு ரசிகர்களை உற்சாகமடைய செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக யுவன் ஷங்கர் ராஜா குறிப்பிட்ட பெரிய படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 ஆக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக யுவன் ஷங்கர் ராஜா இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘பிரியாணி’ படத்திற்காக தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களான டி இமான், ஜிவி பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனி ஆகியோரை ஒன்றாக இணைத்து பாட வைத்தார். அதன்படி தற்போது உருவாகி வரும் தளபதி 68 படத்திற்கு அனிருத், சந்தோஷ் நாராயணன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

 

Sir, namma paattum irukku... Can't wait to put out 😊 https://t.co/l4WDQr3mTw

— Raja yuvan (@thisisysr) August 2, 2023

“கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல..” – இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகர் ராஜ்கிரன் பதிவு.!
சினிமா

“கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல..” – இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகர் ராஜ்கிரன் பதிவு.!

“எழுந்து வா இமயமே..”  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா.!  - பாட்டு பாடி உற்சாகப்படுத்திய வைரமுத்து..வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

“எழுந்து வா இமயமே..” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா.! - பாட்டு பாடி உற்சாகப்படுத்திய வைரமுத்து..வைரலாகும் வீடியோ உள்ளே..

சந்தானத்திற்கு சரியான நேரத்தில் கை கொடுத்த ‘DD Returns’.. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்.!
சினிமா

சந்தானத்திற்கு சரியான நேரத்தில் கை கொடுத்த ‘DD Returns’.. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்.!