தமிழ் திரையுலகில் MSV-கண்ணதாசன், TMS-சிவாஜி கணேசன், இளையராஜா-பாரதிராஜா, மணிரத்னம்-A.R.ரகுமான் என மகத்தான கலைஞர்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் போதெல்லாம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய ஒரு கூட்டணி என்றால் அது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா - சிலம்பரசன் கூட்டணி தான்.

ஒவ்வொரு முறை இவர்கள் இணைந்து வெளிவரும் பாடல்கள்  வேற லெவல் வெற்றியைத் பெறும்.இந்த நிலையில் மீண்டும் அடுத்ததாக ஒரு புதிய ஆல்பம் பாடலுக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் நடிகர்  சிலம்பரசன் இணைகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் U1 Records சார்பில் தயாராகவுள்ள புதிய பாடலை நடிகர் சிலம்பரசன் பாடவுள்ளார். 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் அபி & அபி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அபினேஷ் இளங்கோவன் மற்றும் நந்தினி R அபினேஷ் மற்றும் Noise & Grains இணைந்து தயாரிக்க அறிமுக இசையமைப்பாளர்  A.K.ப்ரியன் இசையமைக்கும் புதிய பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத நடிகர் சிலம்பரசன் பாடுகிறார்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் டாங்லி ஜம்போ இயக்கும் இப்பாடலுக்கு மேயாத மான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான விது  அய்யனா ஒளிப்பதிவு செய்கிறார். 

சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான பாவ கதைகள் ஆந்தாலஜி வெப் சீரிஸில் தங்கம் எபிசோடில் சத்தார் என்ற கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த வரவேற்ப்பை பெற்ற நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்கவுள்ள இந்த புதிய பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.