“பொன்னியின் செல்வன் நாவல் போல் இல்லையே” என்ற விமர்சனத்திற்கு அட்டகாசமாக பதிலளித்த எழுத்தாளர் ஜெயமோகன் – முழு நேர்காணல் இதோ..

பொன்னியின் செல்வன் விமர்சனத்திற்கு பதிலளித்த எழுத்தாளர் ஜெயமோகன் - Writer Jayamohan about maniratnam ponniyin selvan | Galatta

உலகபுகழ் பெற்ற தமிழ் நாவலாக பல தசாபதங்களாக அதிக வாசகர்களை கொண்டிருக்கும் நாவல் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன். அனைத்து மக்களையின் கற்பனை எண்ணவோட்டத்திற்கு தீனி போட்ட இந்த நாவலை திரைப்படமாக எடுக்க பல முயற்சிகள் நடைபெற்று அனைத்து தோல்வியில் முடிந்தது நீண்ட விடா முயற்சியினால் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகளவில் மிகப்பெரிய அளவு வரவேற்பை பெற்று கொண்டாடப் பட்டது. மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்துடன் உருவான இப்படம் சம கால இந்திய சினிமாவில் நேர்த்தியின் உச்சமாகவும் பிரமாண்டமான படைப்பாகவும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியையடுத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பொன்னியின் செல்வன் திரைப்படம் பெற்றிருந்தாலும் பொன்னியின் செல்வன் நாவல் வாசகர்கள் நிறைய விமர்சனத்தை பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு எதிராக வைத்தனர். அதில் குறிப்பாக நாவலில் இருப்பது போல் இல்லையே என்பது தான். இது குறித்து பொன்னியின் செல்வன் படத்தின் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களிடம் நமது கலாட்டா மீடியா சிறப்பு பேட்டியில் கேள்வி கேட்பட்டது. அதற்கு அவர்,

“நாவல் பெரும்பாலும் பேச்சுக்களிலும் எண்ணங்களையும் அதிலே போயிடும். நாவல் கலைக்கு உகந்தது.‌ சினிமா அப்படி கிடையாது‌. மையக்கதாபாத்திரங்கள் யாரும் சந்திக்கவில்லை என்றால் அது கதையே கிடையாது. அது படமாகவும் மாறாக. நாவலில் ஆதித்ய கரிகாலனை பற்றி எல்லோரும் பேசிறாங்க.. அவன் நேரில் வரும்போது இறந்து போயிடுறான்.அப்படி ஒரு சினிமா எடுக்க முடியாது. சினிமாவில் முதல்காட்சியிலே ஆதித்ய கரிகாலன் இறந்து போயிடுறான். சினிமாவில் ஆள் தான் முக்கியம். நான்கு பேர் பேசுனா ஒரு காட்சி கிடைத்திடாது. நாவலில் ஐந்து கதாபாத்திரங்கள் ஆதித்ய கரிகாலனை பற்றி பேசினாலே காட்சி வந்துவிடும். சினிமால அப்படி செய்யபட முடியாது. தமிழ்ல நாம் பார்க்குறது Hyper Drama. நாம் அதற்குதான் பழகிருக்கோம். இன்னொன்று வெளிநாட்டு படங்களில் இருக்கும் Flat screenplay .. சரியான உதாரணம் கிளியோபாட்ரா படம்.  டிராமா இருக்கும் ஆனா குறைவான டிராமா இருக்கும் அது தான் மணிரத்தினத்தின் கலை. ஆரம்பத்திலிருந்தே அதைதான் அவர் பண்ணிட்டு வராரு.

உதாரணமாக ஒரு காட்சியில் ஆதித்ய கரிகாலன் எக்காரணத்திற்கொண்டு அவன் தங்கச்சியை விட்டு கொடுக்க மாட்டான்‌. அவள் மீது அவ்ளோ பெரிய மரியாதை இருக்கு. காதலி நந்தினியை பிரித்தாலும் ஆனாலும் மரியாதை இருந்தது. இந்த அளவோடு இருக்கறதனால தான் அந்த படத்தை இளைஞர்கள் பார்க்குறாங்க.. இன்னிக்கு நம்ம வீட்ல பையன்கிட்ட உணர்வு பூர்வமா பேசுனா 'நெஞ்ச நக்காதஅப்படி னு சொல்லுவாங்க.. அப்போ இந்த படம் அது போல நெஞ்ச நக்காம எடுக்கப்பட்ட படம்.  அப்படி நெஞ்ச நக்குன படங்கள் பார்த்து பழகி போனவர்களுக்கு இந்த படம் பழகி போனது போல் தோணும். ஆனால் அவங்களும் திரண்டு வந்து பார்த்தார்கள். 90 வயது வரை 10 வயது பேரன் வரை மூன்று தலைமுறையினரும் பார்க்க கூடிய படம் இது.” என்றார் ஜெயமோகன்

மேலும் எழுத்தாளர் ஜெயமோகன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ...

தந்தையின் இறுதி சடங்குகள் குறித்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்ட அஜித்குமாரின் சகோதரர்! விவரம் உள்ளே
சினிமா

தந்தையின் இறுதி சடங்குகள் குறித்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்ட அஜித்குமாரின் சகோதரர்! விவரம் உள்ளே

13 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனராகும் சசிகுமார்.. ஹீரோவாக பிரபல இயக்குனர்..  - உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..
சினிமா

13 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனராகும் சசிகுமார்.. ஹீரோவாக பிரபல இயக்குனர்.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..

கரிகாலனும் நந்தினியும்.. 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் தேதியை வெளியிட்ட படக்குழு .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

கரிகாலனும் நந்தினியும்.. 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் தேதியை வெளியிட்ட படக்குழு .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான Glimpse இதோ..