சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் மணிமேகலை.2010-ல் சன் மியூசிக் சேனலில் தனது பணியை தொடங்கினார் மணிமேகலை.தொடர்ந்து பல ஹிட் ஷோக்களை ஹோஸ்ட் செய்த மணிமேகலை சன் டிவி,சன் நியூஸ் உள்ளிட்ட சேனல்களிலும் பணியாற்றியுள்ளார்.சிறப்பு நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் தொகுப்பாளினியாக இருந்துள்ளார் மணிமேகலை.

சில சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் ஆடியோ லாஞ்ச்களையும் மணிமேகலை தொகுத்து வழங்கியுள்ளார்.உதவி நடன இயக்குனராக இருந்த ஹுசைனை காதலித்து கடந்த 2017-ல் கரம் பிடித்தார் மணிமேகலை.திருமணத்தை தொடர்ந்து சன் டிவியில் இருந்து பிரேக் எடுத்த மணிமேகலை சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் இணைந்தார்.

விஜய் டிவியின் பிரபல கேம் ஷோவான Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் ஹுசைன் உடன் கலந்துகொண்டார்.இந்த நிகழ்ச்சியில் 3ஆவது இடத்தை பிடித்து அசத்தினார் மணிமேகலை.இதனை தொடர்ந்து கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 2 தொடரை தொகுத்து வழங்கினார்.இதனை தொடர்ந்து விஜய் டிவியின் சமீபத்திய ஹிட் தொடரான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பல ரசிகர்களை பெற்றிருந்ததார்.

கொரோனா காரணமாக முதல் இரண்டு லாக்டவுன்களில் தங்கள் கிராமத்தில் மாட்டிக்கொண்ட மணிமேகலை தன்னுடைய கிராமத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சில வீடியோக்களை வெளியிட்டார் மணிமேகலை,இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.இதனை தொடர்ந்து சென்னைக்கு திரும்பியபின் அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வந்தார் மணிமேகலை.

சில நாட்களுக்கு முன் இவர் சமையல் செய்ய ட்ரை செய்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.அதில் சரியாக கவனிக்காததால் அந்த குக்கர் வெடித்தது.தற்போது இந்த தவறை செய்யாமல் எப்படி சமைப்பது என்பது குறித்து கணவருடன் இணைந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் மணிமேகலை.நகைச்சுவையான இந்த வீடியோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்