தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வினால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் விஷ்ணு விஷால்.கடைசியாக இவரது சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இவர் நடித்துள்ள காடன்,FIR,மோகன்தாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Vishnu Vishal About Jersey Tamil Remake Progress

கடந்த 2019-ல் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் ஜெர்சி.கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ரீமேக் ஆகிரத்து என்றும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிப்பார் என்றும் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தன.

Vishnu Vishal About Jersey Tamil Remake Progress

ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ஜெர்சி படத்தின் தமிழ் ரீமேக் எப்போது வரும் என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால் அந்த படம் குறித்த எந்த ஐடிவாயும் தற்போது இல்லை.படம் குறித்த ஆரம்ப வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றன ஆனால் இப்போது என்ன நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம் என்று தெரிவித்துள்ளார்.