இந்திய சினிமாவின் நடிப்பில் வியத்தக்க முக்கிய நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம்.அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் கோப்ரா மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்துவருகிறார்.

Vikram Clears Rumorus On Not Acting in Films

இவரது மகன் துருவ் விக்ரம் கடந்த வருடம் வெளியான ஆதித்ய வர்மா படத்தில் அறிமுகமானார்.இந்த படம் முடியும்வரை விக்ரம் உடன் இருந்து படவேலைகளை கவனித்து கொண்டார்.பிரபல தொலைக்காட்சி ஒன்று விக்ரம் நடிப்பை விட்டுவிட்டு தனது மகனின் சினிமா வாழ்க்கையை மெருகேற்ற போகிறார் என்று செய்தி வெளியிட்டது.இது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Vikram Clears Rumorus On Not Acting in Films

தற்போது இந்த விஷயம் குறித்து விக்ரம் தரப்பில் இருந்து பதில் வந்துள்ளது.விக்ரம் தற்போது கோப்ரா,பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார் இன்னும் தொடர்ந்து நடிப்பார்.வெளியான செய்தி வெறும் வதந்தி தான் என்று தெளிவுபடுத்தினர்.இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன் நன்கு விசாரித்து வெளியிடுங்கள் என்றும் விக்ரம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Vikram Clears Rumorus On Not Acting in Films