கடந்த ஆண்டு H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் அபிராமி. அதன் பிறகு தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமானவர். 

abirami

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் டிக்டாக்கில் என் அக்கவுன்டை டெலிட் செய்து விட்டேன். மக்கள் பொய்யான ஐடியை நம்பி எங்களை வெறுப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இது போல ஏற்கனவே ட்விட்டரில் போலி அக்கவுண்ட் பிரச்சனை குறித்து குறிப்பிட்டிருந்தேன். தற்போது டிக்டாக்கிலும் இப்படி நடக்கிறது. எல்லோரும் தெரிந்து கொள்ளுங்கள் நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இருக்கிறேன். காரணம் இன்ஸ்டாகிராமில் என் அக்கவுண்ட் வெரிஃபைட் செய்யப்பட்டது. பட்டது போதும் என்று புலம்பி தள்ளியுள்ளார் அபிராமி. 

abirami

அடுத்ததாக எஸ்.பி. சரண் இயக்கவிருக்கும் அதிகாரம் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார் அபிராமி. அதுதவிர்த்து நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார்.