பிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மாநகரம்,கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.ராக்ஸ்டார்அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத்,மாஸ்டர் மஹேந்திரன்,பிரிகிடா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.பட்டிதொட்டி எங்கும் இந்த பாடல்கள் ஓயாது ஒளித்து வருகின்றன.இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழுவினர் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

லாக்டவுன் நேரத்தில் தளபதி விஜயின் சில புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின.மாஸ்டர் டீம் மற்றும் அவர் நண்பர்களுடன் பேசி மகிழ்ந்த வீடியோகாலின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.இதனை தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு தளபதி விஜய்க்கு ஒரு சவால் விடுத்திருந்தார்.அதனை விஜய் ஏற்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

மகேஷ் பாபு தனது பிறந்தநாள் அன்று க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்று ஒன்றை நட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.மேலும் இதனை ஏற்குமாறு தளபதி விஜய்,ஜூனியர் NTR,ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரை நாமினேட் செய்துள்ளார்.

விஜயும்,மகேஷ் பாபுவும் நண்பர்கள் என்பது அனைவரும் தெரிந்ததே.தமிழில் விஜய் எப்படியோ அப்படி ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை தெலுங்கில் கொண்டவர் மகேஷ் பாபு.மகேஷ் பாபுவின் சில படங்களை விஜய் ரீமேக் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மகேஷ் பாபுவின் இந்த சவாலை விஜய் ஏற்பாரா என்று ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமூகவலைத்தளங்களில் பெரிதாக ஆக்டிவ் ஆக இல்லாதவர் தளபதி விஜய்.அவ்வப்போது வந்தாலும் அவருடைய போஸ்ட்களுக்கு லைக்,ஷேர்கள் அள்ளும்.அப்படி இருக்கையில் இந்த சேலஞ்சை தளபதி விஜய் ஏற்றால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.நேற்று விஜய் இந்த சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றை நட்டு அதன் புகைப்படங்களை வெளியிட்டார்.செம சர்ப்ரைஸாக வெளியான இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.

இந்த புகைப்படங்கள் வெளியாகி சில மணி நேரங்களிலேயே பல சாதனைகளை படைத்துள்ளது.இந்த ட்வீட் செய்வதற்கு முன் விஜய்க்கு 2.57 மில்லியன் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்திருந்தனர்,இதற்கு பிறகு 2.61 மில்லியனாக இவரை பின்தொடரும் ரசிகர்கள் உயர்ந்துள்ளனர்.100K ரீட்விட்களை இந்த ட்வீட் 6 மணி நேரத்திற்குள் பெற்றுள்ளது.மேலும் 300 K லைக்குகளை அள்ளியுள்ளது.விஜயின் அக்கவுண்டில் அவரது நெய்வேலி செல்பிக்கு அடுத்த படியாக அதிகம் பகிரப்பட்ட,லைக் செய்யப்பட்ட ட்வீட் ஆக இது தற்போது இருக்கிறது.செம வைரலாக சென்று வரும் இந்த ட்வீட் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.