விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 5. 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கப்பட்ட பிக்பாஸில் முதல் வாரம் கலகலப்பும் நெகிழ வைக்கும் கதைகளும் என கடந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நமிதா மாரிமுத்து முதல் வாரத்திலேயே திடீரென வெளியேறியது ஏமாற்றமாக அமைந்தது. 2-வது வாரத்தின் முதல் நாளே பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டன் தேர்வுக்கான போட்டி மற்றும் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. இதில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக தாமரைச்செல்வி தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற நாமினேஷன் ப்ராசஸ்-ல் தாமரைச்செல்வி மற்றும் பாவனியை தவிர மற்ற அனைத்து ஹவுஸ் மேட்களும் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டார்கள்.நேற்றைய நிகழ்ச்சியில் அபிஷேக் போட்டியாளர்களையும் விமர்சனம் செய்வதும் அவர்களுக்கு அடைமொழி வைப்பதும் என கலகலப்பாக நகர்ந்தது. 

தொடர்ந்து இந்த வாரமும் ஒரு கதை சொல்லட்டா டாஸ்க் தொடர்கிறது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ சற்று முன் வெளியானது. அதில் தாமரைச்செல்வி பிரிந்த தன் மகனைப் பற்றி மிகவும் உருக்கமாக பேச மற்ற ஹவுஸ் மேட்ஸ்  அனைவரும் கண்கலங்கும் புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது. அந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.