தன் சிறந்த நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளிவருகிறது. முன்னதாக இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் இன்று (செப்டம்பர் 9ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது.

இதனைத்தொடர்ந்து இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் அரசியல் திரைப்படமாக துக்ளக் தர்பார் திரைப்படம் நாளை மாலை 6.30மணிக்கு (செப்டம்பர் 10-ஆம் தேதி) நேரடியாக சன் டிவியில் ரிலீசாகிறது. தொடர்ந்து துக்ளக் தர்பார் திரைப்படம் நெட்ஃபிலிக்ஸிலும் செப்டம்பர் 11-ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் டாப்சியும் இணைந்து நடித்திருக்கும் அனபெல் சேதுபதி திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. இயக்குனர் தீபக் சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அனபெல் சேதுபதி படத்தில் ராதிகா சரத்குமார், ஜெகபதிபாபு, யோகிபாபு, சேத்தன், தேவதர்ஷினி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அனபெல் சேதுபதி படத்தின் Sneak Peek வீடியோ வெளியாகியுள்ளது. கலகலப்பான இந்த Sneak peek வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டாரில்  வெளியாகும் இத்திரைப்படத்தின் இந்த அழகான Sneak Peek வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.