தமிழ் சினிமாவின் இன்றியமையாத கதாநாயகனாக உயர்ந்து நிற்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இந்த மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் வெளிவர உள்ளது. முன்னதாக மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனையடுத்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிகை டாப்ஸியும் இணைந்து நடித்திருக்கும் அனபெல் சேதுபதி திரைப்படம் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. அடுத்ததாக விஜய் சேதுபதியின் அரசியல்  திரைப்படமாக வெளிவருகிறது துக்ளக் தர்பார்.

துக்ளக் தர்பார் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க நடிகைகள் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பார்த்திபன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கியுள்ளார்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S.S.லலித் குமார் தயாரித்துள்ளார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் துக்ளக் தர்பார் திரைப்படம் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி ஆறு முப்பது மணிக்கு சன் டிவியில் நேரடியாக வெளியாகிறது தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தின் புதிய ரிலீஸ் ப்ரோமோ வீடியோ வெளியானது. அசத்தலான அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.