உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் செவாலியர் சிவாஜி கணேசன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாக இன்றுவரை கொண்டாடப்படும் தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா. தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவும் , முக்கிய கதாபாத்திரங்களிலும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவியின் இதயத்திருடன் & சந்தோஷ் சுப்ரமணியம், நடிகர் கார்த்தியின் நான் மகான் அல்ல, விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா, தமிழ் சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

குறிப்பாக ஆசை , மெட்டி ஒலி, கோலங்கள், கஸ்தூரி, அத்திப்பூக்கள், செல்லமே, தென்றல், வாணி ராணி, தாமரை மற்றும் திருமணம் என தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் முன்னணி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக நடிகை நீலிமா ராணிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீலிமா அவரது கணவர் மற்றும் முதல் பெண் குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து விரைவில், நாங்கள் மூவரும் நான்காக போகிறோம் 20 வாரங்கள் கடந்து விட்டன, இன்னும் 20 வாரங்கள் உள்ளன என தெரிவித்துள்ளார். நீலிமா ராணியின் இந்த பதிவுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neelima Esai (@neelimaesai)