தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா நடித்து , இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சூரரைப் போற்று. சிம்பிளி ஃப்ளை டெக்கான் புத்தகத்தை தழுவி கேப்டன் கோபிநாத் அவர்களின் பயோபிக் திரைப்படமாக தயாரான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மெகா ஹிட்டானது.

நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகை அபர்ணா பாலமுரளி , கருணாஸ், காளி வெங்கட் , விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்த சூரரைப்போற்று திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இசை அமைக்க ஒளிப்பதிவாளர் நிக்கெத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்தார்.

இத்திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் காத்திருந்த நிலையில் கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதும் பெற்றார் நடிகர் சூர்யா.

மெல்பேர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூரரைப்போற்று திரைப்படம் பலரது பாராட்டுக்களைப் பெற்றதோடு நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றுத்தந்தது.  அந்த விருது தற்போது சூர்யாவிடம் வந்து சேர்ந்தது. அந்த விருதை பெற்ற சூர்யா அதனை பிரித்து பார்க்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்திருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் Thu.Sa.ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.