உணவில்லாமல் இந்த உலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது.சமையல் நாம் அன்றாடம் செய்யும் மிக முக்கிய வேளைகளில் ஒன்று.ஒருவர் வாழ்வதே சாப்பிடுவதற்கு தான்,இந்த பொறப்பு தான் ருசிச்சு சாப்பிட கிடைச்சது என்று பல பொன்மொழிகள் சமையலையும்,உணவையும் பெருமைப்படுத்தும் விதமாக பல இருக்கின்றன.

உணவையும்,சமையலையும் மையப்படுத்தி பல மொழிகளில் பல முன்னணி சேனல்களில் உலகம் முழுவதும் பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தன.குறிப்பாக தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வந்த உணவு சம்மந்தமான நிகழ்ச்சிகள் பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.

விஜய் டிவியின் புதிய முயற்சியாக ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.பலர் இந்த நிகழ்ச்சி தங்களுக்கு செம என்டேர்டைன்மென்டை தருவதாகவும் ரசிகர்கள் பலர் மீம்ஸ்,வீடியோக்கள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த தொடரின் மூலம் பல காமெடியன்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக மாறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சன் டிவியில் சமையல் சம்மந்தமான ஒரு ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்பவுள்ளனர்.இதுவும் குக் வித் கோமாளி போன்ற ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்று தெரிகிறது.இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தொகுத்து வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பப்படும் என்று சில ப்ரோமோக்களை சன் டிவி வெளியிட்டனர்.தற்போது ஒரு புதிய ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளனர்.