கூட்டத்தில் ஒருவனாக ஆரம்பகட்டத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது மக்களின் மனங்களை ஆட்சி செய்யும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியாக உயர்ந்திருக்கிறார். முன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதியும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாக தயாராகியுள்ளன.

தமிழ் மொழியைத் தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வரும் விஜய் சேதுபதி பேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் ஃபர்ஸி எனும் புதிய வெப் சீரிஸில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தற்போது நடிகை கத்ரீனா கைப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் தற்போது மொழிகளை கடந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். பிரபல மராட்டி இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலெக்கர் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அரவிந்த் சுவாமி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி முன்னணி கதாபாத்திரங்களில் இந்த மௌன படத்தை  ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

காந்தி டாக்ஸ் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மே 5ஆம் தேதி காந்தி டாக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.