துப்பறிவாளனாக களமிறங்கிய விஜய் ஆண்டனியின் த்ரில்லர் ட்ரீட்டாக வரும் கொலை... கவனத்தை ஈர்க்கும் புதிய ட்ரெய்லர் இதோ!

விஜய் ஆண்டனியின் கொலை பட புதிய ட்ரெய்லர் வெளியீடு,vijay antony in kolai movie final trailer out now | Galatta

விஜய் ஆண்டனி நடிப்பில் வித்தியாசமான க்ரைம் திரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் கொலை திரைப்படத்தின் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியானது. தனக்கென தனி பாணியில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அசத்தி வருகிறார். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வந்த விஜய் ஆண்டனி அவர்கள் இயக்குனராக அவதாரம் எடுத்த பிச்சைக்காரன் 2 திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றது. தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

அந்த வகையில் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவான ஆக்ஷன் திரைப்படமான அக்னி சிறகுகள் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. முன்னதாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதைப்போல் தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் அவர்களின் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ரத்தம் திரைப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் எனும் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி தற்போது நடித்து வருகிறார். எனவே அடுத்தடுத்து வரிசையாக விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க இருக்கின்றன.

இதனிடையே இயக்குனர் பாலாஜி கே குமார் இயக்கத்தில் க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் தான் கொலை. விஜய் ஆண்டனி அவர்களோடு இணைந்து இறுதிச்சுற்று, ஓ மை கடவுளே பட நாயகி ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்திருக்கும் கொலை படத்தில் மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, சித்தார்த்தா ஷங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் சங்கீத் போரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த கொலை திரைப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்திருக்கிறார்.  கொலை திரைப்படத்தின் பாடல், டீசர், ட்ரெய்லர் ஆகியவை ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் ரிலீசுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர். அந்த வகையில் தற்போது வெளிவர முற்றிலும் தயாராகி இருக்கும் கொலை திரைப்படம் வருகிற ஜூலை 21 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் ரிலீசுக்கு முன்பாக கொலை திரைப்படத்தின் கடைசி ட்ரெய்லராக புதிய ட்ரெய்லர் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். விறுவிறுப்பான அந்த ட்ரெய்லர் இதோ…
 

உலகப் புகழ்பெற்ற பேலசில் ஆஸ்கார் வின்னர் MM.கீரவாணி - வைரமுத்து - KT.குஞ்சுமோன்... ஜென்டில்மேன் 2 பட ஸ்பெஷல் அப்டேட் இதோ!
சினிமா

உலகப் புகழ்பெற்ற பேலசில் ஆஸ்கார் வின்னர் MM.கீரவாணி - வைரமுத்து - KT.குஞ்சுமோன்... ஜென்டில்மேன் 2 பட ஸ்பெஷல் அப்டேட் இதோ!

சினிமா

"பாக்ஸ் ஆபிஸ் புல்டோசர்!"- ரிலீசுக்கு முன்பே ஆல் டைம் ரெகார்ட் படைத்த பிரபாஸின் சலார்... வேற லெவல் மாஸ் அறிவிப்பு இதோ!

சினிமா

"புயலுக்கு முன் வரும் இடி!"- லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மிரட்டலான லுக்... ஷாரூக் கான் வெளியிட்ட ஜவான் பட அசத்தலான GLIMPSE!