சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் மாபெரும் வெற்றி... 4 நாள் வசூல் இத்தனை கோடியா? அசத்தலான BOX-OFFICE விவரம் இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் 50கோடியை கடந்தது,sivakarthikeyan in maaveeran movie crossed 50 crores in box office | Galatta

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் மாவீரன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியானது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்  கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. இருப்பினும், அடுத்தடுத்து பக்கா ட்ரீட் கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் வரிசையாக வர இருக்கின்றன. அந்த வகையில் இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகிறது.

முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . சமீபத்தில் SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கப்பட்ட நிலையில், இதர அறிவிப்புகள் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தெரிகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரும் என ரசிகர்கள் அவர்களோடு காத்திருக்கின்றனர். 

இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில்  தற்போது வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ள திரைப்படம் தான் மாவீரன். முன்னதாக யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதை வென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளும் விருமன் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட கடந்த ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் மாவீரன் படம் ரிலீஸானது. சிவகார்த்திகேயனின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத வித்தியாசமான படமாக வெளிவந்திருக்கும் இந்த மாவீரன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரிலீசான நான்கு நாட்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாவீரன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த நான்கு நாட்களில் மாவீரன் திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

Big thanks and Gratitude to SK fans,cinema audience and press & media for making #Maaveeran /#Mahaveerudu a BLOCKBUSTER 💥😇🙏❤️#BlockbusterMaveeran #BlockbusterMahaveerudu

🌟 @Siva_Kartikeyan
🎙️ @VijaySethuOffl / @RaviTeja_offl
🎬 @madonneashwin #VeerameJeyampic.twitter.com/IRdO8jkNQF

— Shanthi Talkies (@ShanthiTalkies) July 18, 2023

சினிமா

"பாக்ஸ் ஆபிஸ் புல்டோசர்!"- ரிலீசுக்கு முன்பே ஆல் டைம் ரெகார்ட் படைத்த பிரபாஸின் சலார்... வேற லெவல் மாஸ் அறிவிப்பு இதோ!

சினிமா

"புயலுக்கு முன் வரும் இடி!"- லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மிரட்டலான லுக்... ஷாரூக் கான் வெளியிட்ட ஜவான் பட அசத்தலான GLIMPSE!

சினிமா

"குமரேசன் ரெடி!"- வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 பட ஷூட்டிங் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த சூரி... ட்ரெண்டாகும் புது GLIMPSE இதோ!