தளபதி68 இயக்குனர் வெங்கட் பிரபு - யோகி பாபு இணைந்து நடித்த புதிய படம்... ரசிகர்களை கவர்ந்த கலக்கலான ட்ரெய்லர் இதோ!

வெங்கட் பிரபு யோகி பாபு சினேகாவின் ஷாட் பூட் த்ரீ பட ட்ரெய்லர் வெளியீடு,venkat prabhu sneha yogi babu in shot boot three trailer out now | Galatta

தளபதி விஜயின் 68 வது படமான தளபதி 68 படத்தை இயக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாட் பூட் த்ரீ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெங்கட் பிரபு தனக்கென தனி பாணியில் தொடர்ந்து அட்டகாசமான என்டர்டைனிங் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக தெலுங்கு மற்றும் தமிழனை இரு மொழிகளில் நடிகர் நாகைதன்யா நடிப்பில் வெளிவந்த கஸ்டடி திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து தளபதி விஜயின் தளபதி 68 திரைப்படத்தை அடுத்ததாக இயக்குகிறார் வெங்கட் பிரபு. முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டுள்ளன. 

அதன் ஒரு பகுதியாக உலகின் முன்னணி VFX நிறுவனங்களில் ஒன்றாக ஆஸ்கார் விருதுகளை வென்ற USC ICT நிறுவனத்துடன் தளபதி 68 படக்குழு கைகோர்த்துள்ளது. லைட் ஸ்டேஜ் என்ற முறையில் மேம்பட்ட மோஷன் கேப்சர் செய்யக்கூடிய உயர்தர VFX பணிகளுக்காக தளபதி 68 படக்குழு தற்போது USC ICT நிறுவனத்துடன் இணைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில்  நடைபெற்று வரும் தளபதி 68 திரைப்படத்தின் இந்த முதற்கட்ட பணியில் தளபதி விஜய் ஈடுபட்டிருக்கும் புகைப்படத்தை தனது விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் வெங்கட் பிரபு, "எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்!!! #தளபதி68" என குறிப்பிட்டு சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதர அறிவிப்புகள் எல்லாம் லியோ திரைப்படத்தின் ரிலீஸ்க்கு பிறகு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் ஷாட் பூட் த்ரீ. அச்சமுண்டு அச்சமுண்டு மற்றும் நிபுணன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஷாட் பூட் த்ரீ திரைப்படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிகை சினேகா, நடிகர் யோகி பாபு மற்றும் குழந்தை நட்சத்திரங்களான பூவையார், கைலாஷ் ஹீட், பிரணித்தி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சிவாங்கி, வேதாந்த் வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் பரத் விக்ரமன் படத்தொகுப்பு செய்திருக்கும் ஷாட் பூட் த்ரீ திரைப்படத்திற்கு ராஜேஷ் வைத்தியா இசை அமைத்திருக்கிறார். விரைவில் இந்த ஷாட் பூட் த்ரீ திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஷாட் பூட் த்ரீ திரைப்படத்தின் கலக்கலான ட்ரெய்லர் வெளியானது. அந்த ட்ரெய்லர் இதோ…